Follow Our Facebook Page

Kaaram, Coffee, Cinema!

Friday 17 February 2012

காரம், காபி, சினிமா! | படம் பார்த்த உணர்வு - KCC Dongli Jumbo






கிட்டதட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு என்னை எழுத தூண்டிய பாலாஜிக்கு என் நன்றிகள். யாரு பாலாஜின்னு நீங்க யோசிச்சா நான் என்ன செய்ய!!! ஒன்னும் பண்ண முடியாது நானே சொல்லி தான் ஆகணும், "காதலில் சொதப்புவது எப்படி" படத்தோட டைரக்டர். அனா பாலாஜி மேல எனக்கு ஒரு கோவம் இருக்கு. அது எதுக்குன்னு நீங்க யோசிச்சா, நான் ஒன்னும் பண்ண முடியாது. மறுபடியும் நானே சொல்லி தான் ஆகணும்..... 

ஒன்னும் இல்லங்க நான் என் காதல்ல சொதப்பி இருக்க மாட்டேனே, அனால் என் கதை அறிந்தவர்களுக்கு மட்டும் தான் நான் சொல்லும் உள் அர்த்தம் புரியும். பாலாஜி இந்த படத்தை கொஞ்ச நாள் முன்னாடியே எடுத்துருந்தா நானும் தப்பிச்சுருப்பேன், நானும் பொலம்பி இருக்க மாட்டேன், எந்த பொண்ணு பின்னாடியும் போய் இருக்க வேணாம்!!! இப்போ சொல்லுங்க என் கோவம் நியாயம் தானே. தயவு செஞ்சு லவ் பண்றவங்க, பண்ணிட்டு இருக்கறவங்க, பண்ணிட்டே இருக்கறவங்க, பண்ணிட்டே இருக்கணும் நெனைக்கறவங்க,

லவ்ல சொதப்பிட்டோமே இல்ல சொதப்பாம இருக்கனுமேனு நெனைக்கறவங்க, ஏன்டா லவ்ல சொதப்பினோம்ன்னு யோசிக்கறவங்க எல்லாரும் போய் "காதலில் சொதப்புவது எப்படி" பாருங்க. இன்னொன்னு லவ்க்கு ரூல்ஸ் கிடையாது அதே நேரம் வயசும் கிடையாது. அதனால உங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சி, நண்பர்கள், உறவினர்கள்ன்னு யாருமே லவ்ல சொதப்பிடக்கூடாதுன்னு நெனைசீங்கன்னா, அதுக்கும் வேற வழி இல்ல காதலில் சொதப்புவது எப்படி படத்தை மொத்தமா எல்லாத்தையும் கூட்டிட்டு போய் காட்டுங்க. காதலில் சொதப்புவது எப்படி எப்படின்னு டைட்டில் வெச்சு காதலில் சொதப்பாமல் இருக்க கதுக்குடுதுட்டீங்களே பாலாஜி.... எங்கயோ போயிட்டீங்க. இந்த படம் பாத்துட்டு முடிவு பண்ணுங்க - படம் நல்லா இருக்கா இல்லையான்னு இல்ல! லவ் பண்ணலாமா வேணாமா அப்பறம் யார லவ் பண்ணலாம்னு கூட!!!!!!

இத படிச்சுட்டு இருக்கற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு தோணும். ஹப்பாடா, படிச்சா எல்லாத்துக்கும் என்னோட நன்றிகள். இந்த படத்தை போய் பாக்கறதுக்கும் சேத்து தாங்க. இந்த படம் நல்லா இருக்குனு சொன்னதுக்கு சித்தார்த்தை வெறுக்கும் ஒருவர் "ஐய்யயோ படம் ஓடிடுமா"நு கேட்டார், தயவு செஞ்சு சித்தார்த்தை மறந்துட்டு போய் படம் பாரு, நெஜம்மாவே நீ சித்தார்த்தை மறந்துடுவேன்னு நான் சொன்னேன். அப்பறம் இதே மாறி "காதலி ஜெய்ப்பது எப்படி" a film by Dongli Jumbo எடுங்கன்னு ஐடியா குடுத்த அன்பு தம்பிகள் ஹிப் ஹோப் தமிழா ஆதிக்கும் நரேஷுக்கும் இத நான் சமர்ப்பிக்கறேன். கார்த்திக் எஸ் எஸ் - ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தே, செஞ்சுட்டேன் டா. போதுமா :) :) :) இத யாரெல்லாம் படிக்கணும்னு நான் மனசுல நெனைச்சுட்டு எழுதறேனோ அவங்க எல்லாரும் இத படிக்கனும்டா ஆண்டவா!!!! :P :P காதலித்து சொதப்புவோம்.... காதலித்து சொதப்புவோம்.... காதலித்து சொதப்புவோம்....

KCC Dongli Jumbo

Do you like this story?