Follow Our Facebook Page

Kaaram, Coffee, Cinema!

Monday 13 February 2012

கைப்புள்ள எழுதுகிறேன்...

ரொம்ப நாளைக்கப்புறமா என் கல்லூரி சீனியரும், அன்பிற்குரிய அண்ணனுமான, இளையராஜா அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். டேய் கைப்புள்ள, காரம், காபி, சினிமா சைட்டுக்கு உன்னையும் பங்களிப்பாளனா சேத்திருக்கேன், வந்து சினிமாவப் பத்தி எதையாவது எழுதுடான்னு சொன்னாரு. இளையராஜாங்கற பேருக்காகவே அவர் மேல நிரம்ப மரியாதை வைச்சிருக்கேன். அவர் வார்த்தைய தட்டவா முடியும்! உடனே ஒத்துக்கிட்டேன்.

கூடவே ஒரு நிபந்தனையும் வச்சாரு! நாலு பேர் பேரச் சொல்லி, இவுங்கள மட்டும் கலாச்சுடாதடா கைப்புள்ள, அப்புறம் நம்ம ஒடம்புல எங்க அடிபட்டுச்சுன்னு சொல்லிக்க முடியாத எடத்தையெல்லாம் ரண ரணமா ஆக்கிட்டுப் போயிடுவானுங்க, அந்த நெலம நமக்கு வர வேணாம்டான்னாரு. அதுவுமில்லாம அந்த நாலு பேரு மேலயும் அண்ணனுக்கு அளவில்லாத மரியாதை. ஆகட்டும்ணே, அப்படியே செஞ்சுடலாம்னு சொல்லிட்டேன்.

ஃபோன வைச்சு கால் மணிநேரத்துக்கு அப்புறம் “எழுதனூன்னு தோண்றது, ஆனா என்னத்த எழுதுறதுன்னு தெரியலையே”ன்னு கௌரவம் சிவாஜி மாதிரி யோசிச்சிட்டிருந்தப்போ, விபரீதமா ஒரு ஐடியா வந்துச்சு! நாம ஏன் திரை விமர்சனம் எழுதக் கூடாது! ரைட்டு, நம்மள நாலு பேர் கழுவிக் கழுவி ஊத்தாம என்னைக்கு நிம்மதியா தூங்கிருக்கோம்!

சினிமா டிக்கெட் விக்கிற வெலவாசில எங்கேர்ந்து எழுதுறது திரை விமர்சனம்! மைண்ட் ப்ளாக்காயிடுச்சு! அப்பத்தான் தோணுச்சு நாம ஏன் லோ-பட்ஜெட் திரை விமர்சனம் எழுதக் கூடாதுன்னு! லோ-பட்ஜெட் சினிமா தெரியும், அது என்னடா அது லோ-பட்ஜெட் திரை விமர்சனம்னு நெனைக்கிறீங்களா! எந்த பழைய படத்துக்கெல்லாம் முப்பது ரூபாய்க்குள்ள டிவிடி கிடைக்குதோ, அதுக்கெல்லாம் திரை விமர்சனம் எழுதுனா அதுதான் லோ-பட்ஜெட் திரை விமர்சனம்.

கம்பு, கட்டை, வெளக்கமாறு, செருப்பு, தக்காளி, அழுகுன முட்டை,
இதையெல்லாம் எடுத்து ரெடியா வைச்சுக்க உங்களுக்கு அவகாசம் வேணும்ல. அதனால என்னோட முதல் பதிவ நாளன்னிக்கி காலைல ராகு காலத்துல ரிலீசாகுற மாதிரி ஸ்கெட்யூல் பண்ணிருக்கேன்.

அதுவுமில்லாம நாளைக்கு காதலர் தினம். அவுங்கவுங்க லவ்வரோட இந்து முண்ணனி, ஸ்ரீராம் சேனாகாரங்க கண்ணுல பட்டுடாம ஜாக்கிரதையா காதலர் தினத்தைக் கொண்டாடிட்டு, புதன் கிழ்மை பத்திரமா வந்து சேருங்க.

போயிட்டு வற்றேன். வளர நன்னி! (ஏம்ப்பா, பன்றி பன்னியாகும் போது, நன்றி நன்னியாகாதா!)

Do you like this story?